குர்ஆன் 9:56 — இறுதியான எச்சரிக்கை
அவர்கள் உங்களைச் சார்ந்தவர்களாக இல்லாத அதே சமயம், அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள்தான் என்று அவர்கள் கடவுள் மீது சத்தியம் செய்கின்றனர்; அவர்கள் பிளவுண்டாக்கும் கூட்டத்தினர் ஆவர்.
[9:55] அவர்களுடைய செல்வத்தாலோ அல்லது அவர்களுடைய குழந்தைகளாலோ கவரப்பட்டு விடாதீர்கள். கடவுள் இவைகளை அவர்களுக் கான தண்டனைக்கு மூல காரணங்களாக ஆக்குகின்றார், மேலும் (அவர்கள் மரணிக்கும் போது) அவர்கள் நம்ப மறுத்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களது ஆன்மாக்கள் பிரிந்து செல்கின்றன.
[9:57] ஒரு புகலிடத்தையோ, அல்லது குகையையோ, அல்லது ஒளிந்து கொள்ளும் ஓர் இடத்தையோ, அவர்கள் காண்பார்களாயின், அவர்கள் அதன் பால் விரைந்து சென்று விடுவார்கள்.