Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:67 — இறுதியான எச்சரிக்கை

நயவஞ்சக ஆண்களும் மற்றும் நயவஞ்சக பெண்களும் ஒருவர் மற்றவரைச்சார்ந்தவர்களே- அவர்கள் தீமையை ஆதரிக்கின்றனர் மேலும் நன்னெறியைத் தடுக்கின்றனர், மேலும் அவர் கள் கஞ்சத்தனம் கொண்டவர்கள். அவர்கள் கடவுள்-ஐ மறந்து விட்டனர், எனவே அவர் அவர்களை மறந்து விட்டார். நயவஞ்சகர்கள் உண்மையாகவே தீயவர்கள்தான்.

[9:66] சாக்குப் போக்கு சொல்லாதீர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டதன் பின்னர் நம்ப மறுத்து விட்டீர்கள். உங்களில் சிலரை நாம் மன்னித்து விட்டாலும், உங்களில் உள்ள மற்றவர்களை, அவர்களுடைய தீய செயல்களின் விளைவாக நாம் தண்டிப்போம்.

[9:68] நயவஞ்சக ஆண்களுக்கும், மற்றும் நயவஞ்சகப் பெண்களுக்கும், அவ்வாறே நம்ப மறுப்பவர் களுக்கும் கடவுள் நரக நெருப்பை வாக்களிக் கின்றார், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். அது அவர்களுக்குப் போது மானது. கடவுள் அவர்களை தண்டனைக்கென விதித்து விட்டார்; அவர்கள் நிலைத்திருக்கும் ஒரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.