குர்ஆன் 9:66 — இறுதியான எச்சரிக்கை
சாக்குப் போக்கு சொல்லாதீர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டதன் பின்னர் நம்ப மறுத்து விட்டீர்கள். உங்களில் சிலரை நாம் மன்னித்து விட்டாலும், உங்களில் உள்ள மற்றவர்களை, அவர்களுடைய தீய செயல்களின் விளைவாக நாம் தண்டிப்போம்.
[9:65] நீர் அவர்களைக் கேட்டால், “நாங்கள் பரிகாசம் செய்துகொண்டும், மேலும் ஏமாற்றிக் கொண்டும் மட்டுமே இருந்தோம்,” என்று அவர்கள் கூறுவார்கள். “நீங்கள் கடவுள்-ஐயும், அவருடைய வெளிப்பாடுகளையும், மேலும் அவருடைய தூதரையும் பரிகாசம் செய்கின் றீர்கள் என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டீர்களா?” என்று கூறுவீராக
[9:67] நயவஞ்சக ஆண்களும் மற்றும் நயவஞ்சக பெண்களும் ஒருவர் மற்றவரைச்சார்ந்தவர்களே- அவர்கள் தீமையை ஆதரிக்கின்றனர் மேலும் நன்னெறியைத் தடுக்கின்றனர், மேலும் அவர் கள் கஞ்சத்தனம் கொண்டவர்கள். அவர்கள் கடவுள்-ஐ மறந்து விட்டனர், எனவே அவர் அவர்களை மறந்து விட்டார். நயவஞ்சகர்கள் உண்மையாகவே தீயவர்கள்தான்.