குர்ஆன் 9:65 — இறுதியான எச்சரிக்கை
நீர் அவர்களைக் கேட்டால், “நாங்கள் பரிகாசம் செய்துகொண்டும், மேலும் ஏமாற்றிக் கொண்டும் மட்டுமே இருந்தோம்,” என்று அவர்கள் கூறுவார்கள். “நீங்கள் கடவுள்-ஐயும், அவருடைய வெளிப்பாடுகளையும், மேலும் அவருடைய தூதரையும் பரிகாசம் செய்கின் றீர்கள் என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டீர்களா?” என்று கூறுவீராக
[9:64] தங்களுடைய உள்ளங்களில் உள்ளவற்றை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சூரா வெளிப்பட்டுவிடுமோ என்று நயவஞ்சகர்கள் கவலையுறுகின்றார்கள். “பரிகாசம் செய்து கொண்டேயிருங்கள். நீங்கள் எதைக் குறித்துப் பயந்து கொண்டிருக்கின்றீர்களோ அதையே மிகச்சரியாகக் கடவுள் வெளிப்படுத்துவார்,” என்று கூறுவீராக.
[9:66] சாக்குப் போக்கு சொல்லாதீர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டதன் பின்னர் நம்ப மறுத்து விட்டீர்கள். உங்களில் சிலரை நாம் மன்னித்து விட்டாலும், உங்களில் உள்ள மற்றவர்களை, அவர்களுடைய தீய செயல்களின் விளைவாக நாம் தண்டிப்போம்.