Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:64 — இறுதியான எச்சரிக்கை

தங்களுடைய உள்ளங்களில் உள்ளவற்றை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சூரா வெளிப்பட்டுவிடுமோ என்று நயவஞ்சகர்கள் கவலையுறுகின்றார்கள். “பரிகாசம் செய்து கொண்டேயிருங்கள். நீங்கள் எதைக் குறித்துப் பயந்து கொண்டிருக்கின்றீர்களோ அதையே மிகச்சரியாகக் கடவுள் வெளிப்படுத்துவார்,” என்று கூறுவீராக.

[9:63] எவர் ஒருவர் கடவுள்-ஐயும், அவருடைய தூதரையும் எதிர்க்கின்றாரோ, அவர் நரக நெருப்பிற்கு என்றென்றும் உள்ளாகிவிட்டார் என்பது அவர்களுக்குத் தெரியாதா? இதுவே மோசமான இழிவாகும்.

[9:65] நீர் அவர்களைக் கேட்டால், “நாங்கள் பரிகாசம் செய்துகொண்டும், மேலும் ஏமாற்றிக் கொண்டும் மட்டுமே இருந்தோம்,” என்று அவர்கள் கூறுவார்கள். “நீங்கள் கடவுள்-ஐயும், அவருடைய வெளிப்பாடுகளையும், மேலும் அவருடைய தூதரையும் பரிகாசம் செய்கின் றீர்கள் என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டீர்களா?” என்று கூறுவீராக