குர்ஆன் 9:63 — இறுதியான எச்சரிக்கை
எவர் ஒருவர் கடவுள்-ஐயும், அவருடைய தூதரையும் எதிர்க்கின்றாரோ, அவர் நரக நெருப்பிற்கு என்றென்றும் உள்ளாகிவிட்டார் என்பது அவர்களுக்குத் தெரியாதா? இதுவே மோசமான இழிவாகும்.
[9:62] அவர்கள் உங்களிடம் உங்களைத் திருப்திப் படுத்துவதற்காகக், கடவுள் மீது சத்தியம் செய்கின்றனர், ஆனால் அவர்கள் மெய்யாக வே நம்பிக்கையாளர்களாக இருந்தால், கடவுள் - ம் அவருடைய தூதரும் தான் திருப்தி செய்யப்படுவதற்கு மிகவும் தகுதியானவர்கள்.
[9:64] தங்களுடைய உள்ளங்களில் உள்ளவற்றை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சூரா வெளிப்பட்டுவிடுமோ என்று நயவஞ்சகர்கள் கவலையுறுகின்றார்கள். “பரிகாசம் செய்து கொண்டேயிருங்கள். நீங்கள் எதைக் குறித்துப் பயந்து கொண்டிருக்கின்றீர்களோ அதையே மிகச்சரியாகக் கடவுள் வெளிப்படுத்துவார்,” என்று கூறுவீராக.