குர்ஆன் 9:62 — இறுதியான எச்சரிக்கை
அவர்கள் உங்களிடம் உங்களைத் திருப்திப் படுத்துவதற்காகக், கடவுள் மீது சத்தியம் செய்கின்றனர், ஆனால் அவர்கள் மெய்யாக வே நம்பிக்கையாளர்களாக இருந்தால், கடவுள் - ம் அவருடைய தூதரும் தான் திருப்தி செய்யப்படுவதற்கு மிகவும் தகுதியானவர்கள்.
[9:61] அவர்களில் சிலர் “அவர் எல்லாவற்றையும் கேட்டுக் கொள்கின்றார்” என்று கூறுபவர் களாக வேதம் வழங்கப்பட்டவரை புண்படுத்து கின்றனர். “அவர் உங்களைக் கவனத்துடன் கேட்பது உங்களுக்குச் சிறந்தது. அவர் கடவுள் - ஐ நம்புகின்றார், மேலும் நம்பிக்கை யாளர்கள் மீது நம்பிக்கை வைக்கின்றார். உங்களிலுள்ள நம்பிக்கை கொண்டவர் களுக்கு அவர் ஒரு கருணையுமாவார்” என்று கூறுவீராக. கடவுள் -ன் தூதரை புண்படுத்து பவர்கள் வலிமிகுந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
[9:63] எவர் ஒருவர் கடவுள்-ஐயும், அவருடைய தூதரையும் எதிர்க்கின்றாரோ, அவர் நரக நெருப்பிற்கு என்றென்றும் உள்ளாகிவிட்டார் என்பது அவர்களுக்குத் தெரியாதா? இதுவே மோசமான இழிவாகும்.