குர்ஆன் 9:61 — இறுதியான எச்சரிக்கை
அவர்களில் சிலர் “அவர் எல்லாவற்றையும் கேட்டுக் கொள்கின்றார்” என்று கூறுபவர் களாக வேதம் வழங்கப்பட்டவரை புண்படுத்து கின்றனர். “அவர் உங்களைக் கவனத்துடன் கேட்பது உங்களுக்குச் சிறந்தது. அவர் கடவுள் - ஐ நம்புகின்றார், மேலும் நம்பிக்கை யாளர்கள் மீது நம்பிக்கை வைக்கின்றார். உங்களிலுள்ள நம்பிக்கை கொண்டவர் களுக்கு அவர் ஒரு கருணையுமாவார்” என்று கூறுவீராக. கடவுள் -ன் தூதரை புண்படுத்து பவர்கள் வலிமிகுந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
[9:60] தான தர்மங்கள் ஏழைகளுக்கும், தேவை யுடையவர்களுக்கும், அவற்றை வசூலிக்கும் பணியாளர்களுக்கும், புதிதாக மாறியவர் களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வ தற்கும், திடீர் செலவினங்கள் சுமத்தப் பட்டவர் களுக்கும், கடவுள்-ன் பாதையிலும், மேலும் பயணத்தில் உள்ள அந்நியர்களுக்கும், சென்றிட வேண்டும். கடவுள்-ன் கட்டளை இவ்விதமானதாகும். கடவுள் எல்லாம் அறிந்தவர். ஞானம் மிக்கவர்.
[9:62] அவர்கள் உங்களிடம் உங்களைத் திருப்திப் படுத்துவதற்காகக், கடவுள் மீது சத்தியம் செய்கின்றனர், ஆனால் அவர்கள் மெய்யாக வே நம்பிக்கையாளர்களாக இருந்தால், கடவுள் - ம் அவருடைய தூதரும் தான் திருப்தி செய்யப்படுவதற்கு மிகவும் தகுதியானவர்கள்.