Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:60 — இறுதியான எச்சரிக்கை

தான தர்மங்கள் ஏழைகளுக்கும், தேவை யுடையவர்களுக்கும், அவற்றை வசூலிக்கும் பணியாளர்களுக்கும், புதிதாக மாறியவர் களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வ தற்கும், திடீர் செலவினங்கள் சுமத்தப் பட்டவர் களுக்கும், கடவுள்-ன் பாதையிலும், மேலும் பயணத்தில் உள்ள அந்நியர்களுக்கும், சென்றிட வேண்டும். கடவுள்-ன் கட்டளை இவ்விதமானதாகும். கடவுள் எல்லாம் அறிந்தவர். ஞானம் மிக்கவர்.

[9:59] கடவுள்-ம், அவருடைய தூதரும் அவர்களுக்கு எதைக் கொடுத்தார்களோ அதைக் கொண்டு அவர்கள் திருப்தி கொள்ள வேண்டும். “எங்களுக்குக் கடவுள் போதுமானவர். கடவுள் அவருடைய கொடைகளில் இருந்து எங்களுக்கு வழங்குவார், மேலும் அவருடைய தூதரும் அவ்வாறே செய்வார். நாங்கள் கடவுள்-ஐ மட்டுமே தேடுகின்றோம்,” என்று அவர்கள் கூறியிருக்க வேண்டும்.

[9:61] அவர்களில் சிலர் “அவர் எல்லாவற்றையும் கேட்டுக் கொள்கின்றார்” என்று கூறுபவர் களாக வேதம் வழங்கப்பட்டவரை புண்படுத்து கின்றனர். “அவர் உங்களைக் கவனத்துடன் கேட்பது உங்களுக்குச் சிறந்தது. அவர் கடவுள் - ஐ நம்புகின்றார், மேலும் நம்பிக்கை யாளர்கள் மீது நம்பிக்கை வைக்கின்றார். உங்களிலுள்ள நம்பிக்கை கொண்டவர் களுக்கு அவர் ஒரு கருணையுமாவார்” என்று கூறுவீராக. கடவுள் -ன் தூதரை புண்படுத்து பவர்கள் வலிமிகுந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.