குர்ஆன் 9:59 — இறுதியான எச்சரிக்கை
கடவுள்-ம், அவருடைய தூதரும் அவர்களுக்கு எதைக் கொடுத்தார்களோ அதைக் கொண்டு அவர்கள் திருப்தி கொள்ள வேண்டும். “எங்களுக்குக் கடவுள் போதுமானவர். கடவுள் அவருடைய கொடைகளில் இருந்து எங்களுக்கு வழங்குவார், மேலும் அவருடைய தூதரும் அவ்வாறே செய்வார். நாங்கள் கடவுள்-ஐ மட்டுமே தேடுகின்றோம்,” என்று அவர்கள் கூறியிருக்க வேண்டும்.
[9:58] அவர்களில் சிலர் உம்முடைய தர்மப்பங் கீட்டினை விமர்சிக்கின்றனர்; அதிலிருந்து அவர்களுக்குத் தரப்பட்டால், அவர்கள் திருப்தியடைகின்றனர், ஆனால் அதிலிருந்து அவர்களுக்குத் தரப்படாவிட்டால், அவர்கள் ஆட்சேபிப்பவர்களாக ஆகிவிடுகின்றனர்.
[9:60] தான தர்மங்கள் ஏழைகளுக்கும், தேவை யுடையவர்களுக்கும், அவற்றை வசூலிக்கும் பணியாளர்களுக்கும், புதிதாக மாறியவர் களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வ தற்கும், திடீர் செலவினங்கள் சுமத்தப் பட்டவர் களுக்கும், கடவுள்-ன் பாதையிலும், மேலும் பயணத்தில் உள்ள அந்நியர்களுக்கும், சென்றிட வேண்டும். கடவுள்-ன் கட்டளை இவ்விதமானதாகும். கடவுள் எல்லாம் அறிந்தவர். ஞானம் மிக்கவர்.