Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:69 — இறுதியான எச்சரிக்கை

كَالَّذينَ مِن قَبلِكُم كانوا أَشَدَّ مِنكُم قُوَّةً وَأَكثَرَ أَموٰلًا وَأَولٰدًا فَاستَمتَعوا بِخَلٰقِهِم فَاستَمتَعتُم بِخَلٰقِكُم كَمَا استَمتَعَ الَّذينَ مِن قَبلِكُم بِخَلٰقِهِم وَخُضتُم كَالَّذى خاضوا ۚ أُولٰئِكَ حَبِطَت أَعمٰلُهُم فِى الدُّنيا وَالءاخِرَةِ ۖ وَأُولٰئِكَ هُمُ الخٰسِرونَ

உங்களுக்கு முன்னர் இருந்தவர்களில் சிலர் உங்களை விடவும் பலமானவர்களாக இருந் தனர், மேலும் அதிகமான செல்வத்தையும் பிள்ளைகளையும் கொண்டிருந்தனர். அவர்கள் தங்களுக்குச் சொந்தமான பொருட்களில் மூழ்கியவர்களாகி விட்டனர். அதேபோல், உங்களுக்கு முன்னர் இருந்தவர்கள் மூழ்கிய அதே விதமாகவே, நீங்களும் உங்களுக்குச் சொந்தமான பொருட்களில் மூழ்கியவர்களாகி விட்டீர்கள். அவர்கள் கவனமற்றிருந்த அதே விதமாக, நீங்களும் கவனமற்றவர்களாகி விட்டீர்கள். இத்தகைய மக்கள்தான் இவ்வுலகம் மற்றும் மறுவுலகம் ஆகிய இரண்டிலும், தங்களு டைய காரியங்களைப் பயனற்றதாக்கியவர்கள்; அவர்கள்தான் நஷ்டமடைந்தவர்கள்.

[9:68] நயவஞ்சக ஆண்களுக்கும், மற்றும் நயவஞ்சகப் பெண்களுக்கும், அவ்வாறே நம்ப மறுப்பவர் களுக்கும் கடவுள் நரக நெருப்பை வாக்களிக் கின்றார், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். அது அவர்களுக்குப் போது மானது. கடவுள் அவர்களை தண்டனைக்கென விதித்து விட்டார்; அவர்கள் நிலைத்திருக்கும் ஒரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.

[9:70] முந்திய தலைமுறையினரிடமிருந்து அவர்கள் எதனையும் கற்றுக் கொள்ள வில்லையா; நோவாவின் சமூகத்தார், ‘ஆது, தமூது, ஆப்ரஹாமின் சமூகத்தார், மித்யன்வாசிகள், மற்றும் (சோடம் மற்றும் கொமர்ராஹ்வைச் சேர்ந்த) தீய செயல்களைப் புரிந்தவர்களிடமிருந்து? அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்றனர். கடவுள் அவர்களுக்கு தீங்கு இழைக்கவில்லை; அவர்கள்தான் தங்களுடைய சொந்த ஆன் மாக்களுக்குத் தீங்கிழைத்துக் கொண்டார்கள்.