Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:70 — இறுதியான எச்சரிக்கை

முந்திய தலைமுறையினரிடமிருந்து அவர்கள் எதனையும் கற்றுக் கொள்ள வில்லையா; நோவாவின் சமூகத்தார், ‘ஆது, தமூது, ஆப்ரஹாமின் சமூகத்தார், மித்யன்வாசிகள், மற்றும் (சோடம் மற்றும் கொமர்ராஹ்வைச் சேர்ந்த) தீய செயல்களைப் புரிந்தவர்களிடமிருந்து? அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்றனர். கடவுள் அவர்களுக்கு தீங்கு இழைக்கவில்லை; அவர்கள்தான் தங்களுடைய சொந்த ஆன் மாக்களுக்குத் தீங்கிழைத்துக் கொண்டார்கள்.

[9:69] உங்களுக்கு முன்னர் இருந்தவர்களில் சிலர் உங்களை விடவும் பலமானவர்களாக இருந் தனர், மேலும் அதிகமான செல்வத்தையும் பிள்ளைகளையும் கொண்டிருந்தனர். அவர்கள் தங்களுக்குச் சொந்தமான பொருட்களில் மூழ்கியவர்களாகி விட்டனர். அதேபோல், உங்களுக்கு முன்னர் இருந்தவர்கள் மூழ்கிய அதே விதமாகவே, நீங்களும் உங்களுக்குச் சொந்தமான பொருட்களில் மூழ்கியவர்களாகி விட்டீர்கள். அவர்கள் கவனமற்றிருந்த அதே விதமாக, நீங்களும் கவனமற்றவர்களாகி விட்டீர்கள். இத்தகைய மக்கள்தான் இவ்வுலகம் மற்றும் மறுவுலகம் ஆகிய இரண்டிலும், தங்களு டைய காரியங்களைப் பயனற்றதாக்கியவர்கள்; அவர்கள்தான் நஷ்டமடைந்தவர்கள்.

[9:71] நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவருக்கொருவர் நேசர்கள் ஆவர். அவர்கள் நன்னெறியை ஆதரிக்கின்றனர், மேலும் தீமையைத் தடுக்கின்றனர், அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கின்றனர், மேலும் கடமையான தர்மத்தை (ஜகாத்) கொடுக்கின்றனர், மேலும் அவர்கள் கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படிகின் றனர். இவர்கள் கடவுள்-உடைய கருணையால் பொழியப்படுவார்கள். கடவுள் சர்வ வல்லமை யுடையவர், ஞானம் மிக்கவர்.