குர்ஆன் 9:71 — இறுதியான எச்சரிக்கை
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவருக்கொருவர் நேசர்கள் ஆவர். அவர்கள் நன்னெறியை ஆதரிக்கின்றனர், மேலும் தீமையைத் தடுக்கின்றனர், அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கின்றனர், மேலும் கடமையான தர்மத்தை (ஜகாத்) கொடுக்கின்றனர், மேலும் அவர்கள் கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படிகின் றனர். இவர்கள் கடவுள்-உடைய கருணையால் பொழியப்படுவார்கள். கடவுள் சர்வ வல்லமை யுடையவர், ஞானம் மிக்கவர்.
[9:70] முந்திய தலைமுறையினரிடமிருந்து அவர்கள் எதனையும் கற்றுக் கொள்ள வில்லையா; நோவாவின் சமூகத்தார், ‘ஆது, தமூது, ஆப்ரஹாமின் சமூகத்தார், மித்யன்வாசிகள், மற்றும் (சோடம் மற்றும் கொமர்ராஹ்வைச் சேர்ந்த) தீய செயல்களைப் புரிந்தவர்களிடமிருந்து? அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்றனர். கடவுள் அவர்களுக்கு தீங்கு இழைக்கவில்லை; அவர்கள்தான் தங்களுடைய சொந்த ஆன் மாக்களுக்குத் தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
[9:72] நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் மேலும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களையும், ஏதேன் தோட்டங்களில் மகத்தான மாளிகைகளையும் கடவுள் வாக்களிக்கின்றார், அங்கே அவர்கள் என்றென் றும் தங்கியிருப்பார்கள். மேலும் கடவுள்-ன் அருட்கொடைகளும் அங்கீகாரமும் இன்னும் மிகப்பெரியதாகும். இதுவே மாபெரும் மகத்தான வெற்றியாகும்.