Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:72 — இறுதியான எச்சரிக்கை

நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் மேலும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களையும், ஏதேன் தோட்டங்களில் மகத்தான மாளிகைகளையும் கடவுள் வாக்களிக்கின்றார், அங்கே அவர்கள் என்றென் றும் தங்கியிருப்பார்கள். மேலும் கடவுள்-ன் அருட்கொடைகளும் அங்கீகாரமும் இன்னும் மிகப்பெரியதாகும். இதுவே மாபெரும் மகத்தான வெற்றியாகும்.

[9:71] நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவருக்கொருவர் நேசர்கள் ஆவர். அவர்கள் நன்னெறியை ஆதரிக்கின்றனர், மேலும் தீமையைத் தடுக்கின்றனர், அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கின்றனர், மேலும் கடமையான தர்மத்தை (ஜகாத்) கொடுக்கின்றனர், மேலும் அவர்கள் கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படிகின் றனர். இவர்கள் கடவுள்-உடைய கருணையால் பொழியப்படுவார்கள். கடவுள் சர்வ வல்லமை யுடையவர், ஞானம் மிக்கவர்.

[9:73] வேதம் வழங்கப்பட்டவரே, நம்ப மறுப்பவர் களுக்கும், நயவஞ்சகர்களுக்கும் எதிராகப் போராடுவீராக, மேலும் அவர்கள் மீதான நடவடிக்கைகளில் கண்டிப்புடன் இருப்பீராக. அவர்களுடைய விதி நரகமாகும்; எத்தகைய தொரு துன்பகரமான தங்குமிடம்!