குர்ஆன் 9:73 — இறுதியான எச்சரிக்கை
வேதம் வழங்கப்பட்டவரே, நம்ப மறுப்பவர் களுக்கும், நயவஞ்சகர்களுக்கும் எதிராகப் போராடுவீராக, மேலும் அவர்கள் மீதான நடவடிக்கைகளில் கண்டிப்புடன் இருப்பீராக. அவர்களுடைய விதி நரகமாகும்; எத்தகைய தொரு துன்பகரமான தங்குமிடம்!
[9:72] நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் மேலும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களையும், ஏதேன் தோட்டங்களில் மகத்தான மாளிகைகளையும் கடவுள் வாக்களிக்கின்றார், அங்கே அவர்கள் என்றென் றும் தங்கியிருப்பார்கள். மேலும் கடவுள்-ன் அருட்கொடைகளும் அங்கீகாரமும் இன்னும் மிகப்பெரியதாகும். இதுவே மாபெரும் மகத்தான வெற்றியாகும்.
[9:74] நம்பிக்கையின்மையின் வார்த்தையை அவர்கள் கூறியிருந்த போதிலும், அதனை ஒரு போதும் கூறவில்லை என்று அவர்கள் கடவுள் மீது சத்தியம் செய்கின்றனர்; அடிபணிந்தோர் ஆகி விட்ட பின்னர் அவர்கள் நம்பமறுத்து விட்டனர். உண்மையில், அவர்கள் தங்களிடம் ஒருபோதும் இருந்திராததை விட்டு விலகிக் கொண்டு விட்டனர். கடவுள்-ம் அவருடைய தூதரும் அவருடைய அருளையும், வாழ்வாதாரங்களையும் அவர்கள் மேல் பொழிந்திருந்தும் அவர்கள் கலகம் செய்து விட்டனர். அவர்கள் வருந்தித்திருந்தி விட்டால், அது அவர்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும். ஆனால் அவர்கள் திரும்பிச் சென்று விட்டால், கடவுள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவர்களுக்கு வலிமிக்க தண்டனையைத் தருவார். அவர்களுக்கு இரட்சகராகவும் எஜமானராகவும் இருப்பதற்குப் பூமியில் எவர் ஒருவரையும் அவர்கள் காணமாட்டார்கள்.