குர்ஆன் 9:76 — இறுதியான எச்சரிக்கை
ஆனால், அவர் தன் வாழ்வாதாரங்களைக் கொண்டு அவர்கள் மீது பொழிந்த போது அவர்கள் கஞ்சர்களாகி விட்டனர், மேலும் வெறுப்புக் கொண்டவர்களாகித் திரும்பிச் சென்று விட்டனர்.
[9:75] அவர்களில் சிலர்: “கடவுள் அவரது அருளைக் கொண்டு எங்கள் மேல் பொழிந்தால், நாங்கள் தர்மம் செய்யக் கூடியவர்களாக இருப்போம், மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்து வோம்,” என்று வாக்குறுதி கூட அளித்தனர்.
[9:77] அதன் விளைவாக, அவரை அவர்கள் சந்திக்கும் நாள்வரை, அவர்களுடைய இதயங் களில் நயவஞ்சகத்தைக் கொண்டு, அவர் களை அவர் பீடித்தார். இது, அவர்கள் கடவுள் -இடம் செய்த வாக்குறுதிகளை முறித்த காரணத்தாலும், மேலும் அவர்கள் பொய்கள் சொல்லிக்கொண்டு இருந்த காரணத்தாலுமே ஆகும்.