குர்ஆன் 9:77 — இறுதியான எச்சரிக்கை
அதன் விளைவாக, அவரை அவர்கள் சந்திக்கும் நாள்வரை, அவர்களுடைய இதயங் களில் நயவஞ்சகத்தைக் கொண்டு, அவர் களை அவர் பீடித்தார். இது, அவர்கள் கடவுள் -இடம் செய்த வாக்குறுதிகளை முறித்த காரணத்தாலும், மேலும் அவர்கள் பொய்கள் சொல்லிக்கொண்டு இருந்த காரணத்தாலுமே ஆகும்.
[9:76] ஆனால், அவர் தன் வாழ்வாதாரங்களைக் கொண்டு அவர்கள் மீது பொழிந்த போது அவர்கள் கஞ்சர்களாகி விட்டனர், மேலும் வெறுப்புக் கொண்டவர்களாகித் திரும்பிச் சென்று விட்டனர்.
[9:78] கடவுள் அவர்களுடைய இரகசியங்களையும், மற்றும் அவர்களுடைய சூழ்ச்சிகளையும் அறிந்திருக்கின்றார் என்பதையும், மேலும் கடவுள் எல்லா இரகசியங்களையும் அறிந் தவராக இருக்கின்றார் என்பதையும் அவர்கள் தெளிவாக புரிந்து கொள்ளவில்லையா?