குர்ஆன் 9:78 — இறுதியான எச்சரிக்கை
கடவுள் அவர்களுடைய இரகசியங்களையும், மற்றும் அவர்களுடைய சூழ்ச்சிகளையும் அறிந்திருக்கின்றார் என்பதையும், மேலும் கடவுள் எல்லா இரகசியங்களையும் அறிந் தவராக இருக்கின்றார் என்பதையும் அவர்கள் தெளிவாக புரிந்து கொள்ளவில்லையா?
[9:77] அதன் விளைவாக, அவரை அவர்கள் சந்திக்கும் நாள்வரை, அவர்களுடைய இதயங் களில் நயவஞ்சகத்தைக் கொண்டு, அவர் களை அவர் பீடித்தார். இது, அவர்கள் கடவுள் -இடம் செய்த வாக்குறுதிகளை முறித்த காரணத்தாலும், மேலும் அவர்கள் பொய்கள் சொல்லிக்கொண்டு இருந்த காரணத்தாலுமே ஆகும்.
[9:79] எவர்கள் அதிகமாகக் கொடுப்பதற்காகத் தாராள மனம் கொண்ட நம்பிக்கையாளர்களை குறைகூறுகின்றார்களோ, மேலும் குறைவாகக் கொடுப்பதற்காக ஏழை நம்பிக்கை யாளர்களை கேலி செய்கின்றார்களோ, அவர்களைக் கடவுள் இகழ்கின்றார். அவர்கள் வலிமிகுந்த தொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்