குர்ஆன் 9:79 — இறுதியான எச்சரிக்கை
எவர்கள் அதிகமாகக் கொடுப்பதற்காகத் தாராள மனம் கொண்ட நம்பிக்கையாளர்களை குறைகூறுகின்றார்களோ, மேலும் குறைவாகக் கொடுப்பதற்காக ஏழை நம்பிக்கை யாளர்களை கேலி செய்கின்றார்களோ, அவர்களைக் கடவுள் இகழ்கின்றார். அவர்கள் வலிமிகுந்த தொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்
[9:78] கடவுள் அவர்களுடைய இரகசியங்களையும், மற்றும் அவர்களுடைய சூழ்ச்சிகளையும் அறிந்திருக்கின்றார் என்பதையும், மேலும் கடவுள் எல்லா இரகசியங்களையும் அறிந் தவராக இருக்கின்றார் என்பதையும் அவர்கள் தெளிவாக புரிந்து கொள்ளவில்லையா?
[9:80] அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கேட்டாலும், அல்லது அவர்களுக்காக நீர் பாவ மன்னிப்புக் கேட்காவிட்டாலும்-அவர்களுக் காக நீர் எழுபதுமுறை பாவமன்னிப்புக் கேட்டாலும்-கடவுள் அவர்களை மன்னிக்க மாட்டார். இதற்கு காரணம் அவர்கள் கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் நம்ப மறுத்ததே யாகும். கடவுள் தீய மக்களை வழிநடத்த மாட்டார்.