குர்ஆன் 9:80 — இறுதியான எச்சரிக்கை
அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கேட்டாலும், அல்லது அவர்களுக்காக நீர் பாவ மன்னிப்புக் கேட்காவிட்டாலும்-அவர்களுக் காக நீர் எழுபதுமுறை பாவமன்னிப்புக் கேட்டாலும்-கடவுள் அவர்களை மன்னிக்க மாட்டார். இதற்கு காரணம் அவர்கள் கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் நம்ப மறுத்ததே யாகும். கடவுள் தீய மக்களை வழிநடத்த மாட்டார்.
[9:79] எவர்கள் அதிகமாகக் கொடுப்பதற்காகத் தாராள மனம் கொண்ட நம்பிக்கையாளர்களை குறைகூறுகின்றார்களோ, மேலும் குறைவாகக் கொடுப்பதற்காக ஏழை நம்பிக்கை யாளர்களை கேலி செய்கின்றார்களோ, அவர்களைக் கடவுள் இகழ்கின்றார். அவர்கள் வலிமிகுந்த தொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்
[9:81] கடவுள்-ன் தூதருக்குப் பின்னால் அவர்கள் தங்கி விட்டது குறித்து சரீர உழைப்பில்லா தவர்கள் மகிழ்வடைந்தார்கள், மேலும் தங்கள் செல்வத்தையும் தங்கள் வாழ்வுகளையும் கொண்டு கடவுள்-க்காகப் பாடுபடுவதை வெறுத்தார்கள். அவர்கள், “இந்த வெயிலில் நாம் ஒன்று திரண்டு புறப்பட வேண்டாம்!” என்று கூறினார்கள். அவர்கள் மட்டும் புரிந்துகொள்ள முடிந்தால், “நரகத்தின் நெருப்பு இதனைவிட அதிக சூடானதாகும்,” என்று கூறுவீராக.