குர்ஆன் 9:81 — இறுதியான எச்சரிக்கை
கடவுள்-ன் தூதருக்குப் பின்னால் அவர்கள் தங்கி விட்டது குறித்து சரீர உழைப்பில்லா தவர்கள் மகிழ்வடைந்தார்கள், மேலும் தங்கள் செல்வத்தையும் தங்கள் வாழ்வுகளையும் கொண்டு கடவுள்-க்காகப் பாடுபடுவதை வெறுத்தார்கள். அவர்கள், “இந்த வெயிலில் நாம் ஒன்று திரண்டு புறப்பட வேண்டாம்!” என்று கூறினார்கள். அவர்கள் மட்டும் புரிந்துகொள்ள முடிந்தால், “நரகத்தின் நெருப்பு இதனைவிட அதிக சூடானதாகும்,” என்று கூறுவீராக.
[9:80] அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கேட்டாலும், அல்லது அவர்களுக்காக நீர் பாவ மன்னிப்புக் கேட்காவிட்டாலும்-அவர்களுக் காக நீர் எழுபதுமுறை பாவமன்னிப்புக் கேட்டாலும்-கடவுள் அவர்களை மன்னிக்க மாட்டார். இதற்கு காரணம் அவர்கள் கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் நம்ப மறுத்ததே யாகும். கடவுள் தீய மக்களை வழிநடத்த மாட்டார்.
[9:82] அவர்கள் குறைவாகச் சிரிக்கட்டும், மேலும் அதிகமாக அழட்டும். இது அவர்கள் சம்பாதித்த பாவங்களுக்கான பிரதிபலனாகும்.