குர்ஆன் 9:82 — இறுதியான எச்சரிக்கை
அவர்கள் குறைவாகச் சிரிக்கட்டும், மேலும் அதிகமாக அழட்டும். இது அவர்கள் சம்பாதித்த பாவங்களுக்கான பிரதிபலனாகும்.
[9:81] கடவுள்-ன் தூதருக்குப் பின்னால் அவர்கள் தங்கி விட்டது குறித்து சரீர உழைப்பில்லா தவர்கள் மகிழ்வடைந்தார்கள், மேலும் தங்கள் செல்வத்தையும் தங்கள் வாழ்வுகளையும் கொண்டு கடவுள்-க்காகப் பாடுபடுவதை வெறுத்தார்கள். அவர்கள், “இந்த வெயிலில் நாம் ஒன்று திரண்டு புறப்பட வேண்டாம்!” என்று கூறினார்கள். அவர்கள் மட்டும் புரிந்துகொள்ள முடிந்தால், “நரகத்தின் நெருப்பு இதனைவிட அதிக சூடானதாகும்,” என்று கூறுவீராக.
[9:83] அவர்கள் உம்மோடு சேர்ந்து தயாராவதற்கு உம்முடைய அனுமதியை அவர்கள் கேட்கும் சூழ்நிலைக்குக் கடவுள் உம்மை மீண்டும் கொண்டு வந்தால், “நீங்கள்” என்னோடு மீண்டும் சேர்ந்து ஒருபோதும் தயாராகவும் வேண்டாம், அன்றி என்னோடு சேர்ந்து எந்த எதிரியுடனும் எப்பொழுதும் போரிடவும் வேண்டாம். ஏனெனில் சரீர உழைப்பில்லாதவர்களோடு சேர்ந்திருக்க வேண்டும் என்பதை நீங்கள் முதலிலேயே தேர்ந்தெடுத்து விட்டீர் கள். ஆகையால், நீங்கள் சரீர உழைப்பில்லாத வர்களுடன் சேர்ந்து தங்கிவிடத்தான் வேண்டும்” என்று கூற வேண்டும்.