குர்ஆன் 10:101 — ஜோனா
“வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்து அத்தாட்சிகளையும் கவனித்துப் பாருங்கள்”. எல்லாச் சான்றுகளும், மேலும் எல்லா எச்சரிக் கைகளும், நம்ப மறுப்பதென்று முடிவெடுத்து விட்ட மக்களுக்கு ஒருபோதும் உதவி செய்ய இயலாது என்று கூறுவீராக.
[10:100] கடவுள்-ன் நாட்டத்திற்கு ஏற்பவே தவிர எந்த ஆன்மாவும் நம்பிக்கை கொள்ள இயலாது. ஏனெனில், புரிந்து கொள்ள மறுப்பவர்கள் மீது அவர் ஒரு சாபத்தை வைத்து விடுகின்றார்.
[10:102] கடந்த காலங்களில் அவர்களைப் போன்றவர் களுக்கு நேர்ந்த விதியையன்றி மற்றொன்றை இவர்கள் எதிர்பார்க்க முடியுமா? “சற்று காத்திருங்கள், மேலும், உங்களோடு சேர்ந்து நானும் காத்திருக்கின்றேன்” என்று கூறுவீராக.