குர்ஆன் 10:102 — ஜோனா
கடந்த காலங்களில் அவர்களைப் போன்றவர் களுக்கு நேர்ந்த விதியையன்றி மற்றொன்றை இவர்கள் எதிர்பார்க்க முடியுமா? “சற்று காத்திருங்கள், மேலும், உங்களோடு சேர்ந்து நானும் காத்திருக்கின்றேன்” என்று கூறுவீராக.
[10:101] “வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்து அத்தாட்சிகளையும் கவனித்துப் பாருங்கள்”. எல்லாச் சான்றுகளும், மேலும் எல்லா எச்சரிக் கைகளும், நம்ப மறுப்பதென்று முடிவெடுத்து விட்ட மக்களுக்கு ஒருபோதும் உதவி செய்ய இயலாது என்று கூறுவீராக.
[10:103] நாம் இறுதியாக, நமது தூதர்களையும், நம்பிக்கை கொண்டவர்களையும் காப்பாற்றி விடுகின்றோம். நம்பிக்கையாளர்களை நாம் காப்போம் என்பது நம்முடைய மாற்ற முடியாத சட்டமாகும்.