குர்ஆன் 10:106 — ஜோனா
“உமக்குப் பயனளிக்கவோ அல்லது தீங்கி ழைக்கவோ சக்தியற்றவற்றைக் கடவுள்-உடன் நீர் வழிபட வேண்டாம். நீர் அதனை செய்தால், நீர் வரம்பு மீறியவராகிவிடுவீர்.”
[10:105] எனக்கு கட்டளையிடப்பட்டுள்ளது:“ஏகத்துவ மார்க்கத்திற்கு உம்மை அர்ப்பணித்தவராக இருக்க வேண்டும்; இணைத் தெய்வ வழிபாட்டை நீர் அனுஷ்டிக்க வேண்டாம்.
[10:107] கடவுள் ஒரு கஷ்டத்தைக் கொண்டு உம்மைத் தீண்டுவாராயின், அவரைத் தவிர வேறெவரும் அதனை நிவர்த்தி செய்ய இயலாது. மேலும் அவர் உமக்கு அருள்பாலிக்கும் போது, எந்தச் சக்தியும் அவருடைய அருளைத் தடுத்து விட முடியாது. அவர் தன் அடியார்களுக்கு மத்தியிலிருந்து அவர் தேர்ந்தெடுப்பவர்கள் மீது அதனை வழங்குகின்றார். அவர் தான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.