Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:107 — ஜோனா

கடவுள் ஒரு கஷ்டத்தைக் கொண்டு உம்மைத் தீண்டுவாராயின், அவரைத் தவிர வேறெவரும் அதனை நிவர்த்தி செய்ய இயலாது. மேலும் அவர் உமக்கு அருள்பாலிக்கும் போது, எந்தச் சக்தியும் அவருடைய அருளைத் தடுத்து விட முடியாது. அவர் தன் அடியார்களுக்கு மத்தியிலிருந்து அவர் தேர்ந்தெடுப்பவர்கள் மீது அதனை வழங்குகின்றார். அவர் தான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[10:106] “உமக்குப் பயனளிக்கவோ அல்லது தீங்கி ழைக்கவோ சக்தியற்றவற்றைக் கடவுள்-உடன் நீர் வழிபட வேண்டாம். நீர் அதனை செய்தால், நீர் வரம்பு மீறியவராகிவிடுவீர்.”

[10:108] “மனிதர்களே, இதில் உங்கள் இரட்சகரிட மிருந்து சத்தியம் உங்களுக்கு வந்துள்ளது. வழிகாட்டப்பட்டவர் எவராயினும், அவர் தன்னு டைய சொந்த நலனிற்காகவே வழிகாட்டப் படுகின்றார். மேலும் வழிதவறிச் செல்பவர் எவராயினும் அவர் தன்னுடைய சொந்த கேட்டிற் காகவே வழிதவறிச் செல்கின்றார். நான் உங்கள் மீது ஒரு பாதுகாவலர் அல்ல” என்று பிரகடனம் செய்வீராக.