குர்ஆன் 10:19 — ஜோனா
மனிதர்கள் ஒரே கூட்டத்தவராகவே இருந்து வந்தனர், பின்னர் அவர்கள் தர்க்கித்துக் கொண்டனர். உமது இரட்சகரிடமிருந்து முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு வார்த்தை இல்லா திருந்தால், அவர்களுடைய தர்க்கங்கள் குறித்து உடனடியாக அவர்கள் தீர்ப்பளிக்கப் பட்டிருப்பார்கள்.
[10:18] கடவுள்-உடன் தங்களுக்குத் தீங்கிழைக்கவோ அல்லது பயனளிக்கவோ சக்தியற்ற இணைத் தெய்வங்களை அவர்கள் வழிபடுகின்றனர், மேலும் அவர்கள், “இவர்கள் கடவுள்-இடம் எங்களுக்கு பரிந்துரை செய்பவர்கள்!” என்று கூறுகின்றார்கள். “வானங்களிலோ அல்லது பூமியிலோ, கடவுள் அறியாத சிலவற்றை அவருக்கு நீங்கள் அறிவிக்கின்றீர்களா?”என்று கூறுவீராக. அவர் துதிப்பிற்குரியவர். பங்குதாரர்கள் தேவைப் படுவதை விட்டும், அவர் மிகவும் உயர்வானவர்.
[10:20] அவர்கள், “அவருடைய இரட்சகரிடமிருந்து அவருக்கு அற்புதம் எதுவும் இறங்கி வராதிருப்பது ஏன்?” என்று கூறுகின்றார்கள். எதிர்காலம் கடவுள்-க் குரியது; எனவே காத்திருங்கள், மேலும் நானும் உங்களுடன் காத்திருக்கின்றேன்” என்று கூறுவீராக.