Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:20 — ஜோனா

அவர்கள், “அவருடைய இரட்சகரிடமிருந்து அவருக்கு அற்புதம் எதுவும் இறங்கி வராதிருப்பது ஏன்?” என்று கூறுகின்றார்கள். எதிர்காலம் கடவுள்-க் குரியது; எனவே காத்திருங்கள், மேலும் நானும் உங்களுடன் காத்திருக்கின்றேன்” என்று கூறுவீராக.

[10:19] மனிதர்கள் ஒரே கூட்டத்தவராகவே இருந்து வந்தனர், பின்னர் அவர்கள் தர்க்கித்துக் கொண்டனர். உமது இரட்சகரிடமிருந்து முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு வார்த்தை இல்லா திருந்தால், அவர்களுடைய தர்க்கங்கள் குறித்து உடனடியாக அவர்கள் தீர்ப்பளிக்கப் பட்டிருப்பார்கள்.

[10:21] துன்பம் அவர்களைத் தாக்கியதற்குப் பின்னர், மக்களின் மீது நாம் கருணையை அளிக்கும் போது, அவர்கள் உடனடியாக நமது வெளிப்பாடுகளுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கின்றனர்! “கடவுள்-ன் திட்டம் மிக அதிகத் திறன் வாய்ந்தது. ஏனெனில் நமது தூதர்கள் உங்கள் சூழ்ச்சியான விஷயங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்டிருக் கின்றனர்” என்று கூறுவீராக.