Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:21 — ஜோனா

துன்பம் அவர்களைத் தாக்கியதற்குப் பின்னர், மக்களின் மீது நாம் கருணையை அளிக்கும் போது, அவர்கள் உடனடியாக நமது வெளிப்பாடுகளுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கின்றனர்! “கடவுள்-ன் திட்டம் மிக அதிகத் திறன் வாய்ந்தது. ஏனெனில் நமது தூதர்கள் உங்கள் சூழ்ச்சியான விஷயங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்டிருக் கின்றனர்” என்று கூறுவீராக.

[10:20] அவர்கள், “அவருடைய இரட்சகரிடமிருந்து அவருக்கு அற்புதம் எதுவும் இறங்கி வராதிருப்பது ஏன்?” என்று கூறுகின்றார்கள். எதிர்காலம் கடவுள்-க் குரியது; எனவே காத்திருங்கள், மேலும் நானும் உங்களுடன் காத்திருக்கின்றேன்” என்று கூறுவீராக.

[10:22] அவர்தான் உங்களை தரையிலும் மற்றும் கடலிலும் பயணிக்கச் செய்கின்றார். நீங்கள் கப்பலில் ஏறிக் கொள்கின்றீர்கள், மேலும் அவை மிதமான நல்ல காற்றில் இதமாக மிதந்து செல்கின்றன. பின்னர் அதிலே மகிழ்ந்திருக்கும் சமயம், உக்கிரமான காற்று வீசுகின்றது, மேலும் அலைகள் அவர்களை ஒவ்வொரு புறத்திலிருந்தும் சூழ்ந்து கொள்கின்றது. இந்த வேளையில் தான் அவர்கள், உண்மையோடு தங்கள் பிரார்த்தனைகளை அவருக்கு மட்டுமே அர்ப்பணித்தவர்களாக கடவுள்-இடம்: “இந்த முறை மட்டும் எங்களை நீர் காப்பாற்றுவீரானால், என்றென்றும் நாங்கள் நன்றியுடன் இருப்போம்” என்று இறைஞ்சிப் பிரார்த்தனை செய்கின்றார்கள்.