குர்ஆன் 10:22 — ஜோனா
هُوَ الَّذى يُسَيِّرُكُم فِى البَرِّ وَالبَحرِ ۖ حَتّىٰ إِذا كُنتُم فِى الفُلكِ وَجَرَينَ بِهِم بِريحٍ طَيِّبَةٍ وَفَرِحوا بِها جاءَتها ريحٌ عاصِفٌ وَجاءَهُمُ المَوجُ مِن كُلِّ مَكانٍ وَظَنّوا أَنَّهُم أُحيطَ بِهِم ۙ دَعَوُا اللَّهَ مُخلِصينَ لَهُ الدّينَ لَئِن أَنجَيتَنا مِن هٰذِهِ لَنَكونَنَّ مِنَ الشّٰكِرينَ
அவர்தான் உங்களை தரையிலும் மற்றும் கடலிலும் பயணிக்கச் செய்கின்றார். நீங்கள் கப்பலில் ஏறிக் கொள்கின்றீர்கள், மேலும் அவை மிதமான நல்ல காற்றில் இதமாக மிதந்து செல்கின்றன. பின்னர் அதிலே மகிழ்ந்திருக்கும் சமயம், உக்கிரமான காற்று வீசுகின்றது, மேலும் அலைகள் அவர்களை ஒவ்வொரு புறத்திலிருந்தும் சூழ்ந்து கொள்கின்றது. இந்த வேளையில் தான் அவர்கள், உண்மையோடு தங்கள் பிரார்த்தனைகளை அவருக்கு மட்டுமே அர்ப்பணித்தவர்களாக கடவுள்-இடம்: “இந்த முறை மட்டும் எங்களை நீர் காப்பாற்றுவீரானால், என்றென்றும் நாங்கள் நன்றியுடன் இருப்போம்” என்று இறைஞ்சிப் பிரார்த்தனை செய்கின்றார்கள்.
[10:21] துன்பம் அவர்களைத் தாக்கியதற்குப் பின்னர், மக்களின் மீது நாம் கருணையை அளிக்கும் போது, அவர்கள் உடனடியாக நமது வெளிப்பாடுகளுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கின்றனர்! “கடவுள்-ன் திட்டம் மிக அதிகத் திறன் வாய்ந்தது. ஏனெனில் நமது தூதர்கள் உங்கள் சூழ்ச்சியான விஷயங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்டிருக் கின்றனர்” என்று கூறுவீராக.
[10:23] ஆனால் அவர்களை அவர் காப்பாற்றியவுடன், அவர்கள் பூமியில் வரம்பு மீறுகின்றனர், மேலும் சத்தியத்தை எதிர்க்கின்றனர். மனிதர்களே, உங்களுடைய வரம்பு மீறல்கள் உங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கு மட்டுமே கேடாகும். நீங்கள் இவ்வுலக வாழ்வில் முற்றிலும் மூழ்கியவர் களாகவே இருக்கின்றீர்கள், பின்னர் நம்மிடமே உங்கள் இறுதித் திரும்புதல் உள்ளது, அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்த ஒவ்வொன்றையும் நாம் உங்களுக்குத் தெரிவிப்போம்.