Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:23 — ஜோனா

فَلَمّا أَنجىٰهُم إِذا هُم يَبغونَ فِى الأَرضِ بِغَيرِ الحَقِّ ۗ يٰأَيُّهَا النّاسُ إِنَّما بَغيُكُم عَلىٰ أَنفُسِكُم ۖ مَتٰعَ الحَيوٰةِ الدُّنيا ۖ ثُمَّ إِلَينا مَرجِعُكُم فَنُنَبِّئُكُم بِما كُنتُم تَعمَلونَ

ஆனால் அவர்களை அவர் காப்பாற்றியவுடன், அவர்கள் பூமியில் வரம்பு மீறுகின்றனர், மேலும் சத்தியத்தை எதிர்க்கின்றனர். மனிதர்களே, உங்களுடைய வரம்பு மீறல்கள் உங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கு மட்டுமே கேடாகும். நீங்கள் இவ்வுலக வாழ்வில் முற்றிலும் மூழ்கியவர் களாகவே இருக்கின்றீர்கள், பின்னர் நம்மிடமே உங்கள் இறுதித் திரும்புதல் உள்ளது, அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்த ஒவ்வொன்றையும் நாம் உங்களுக்குத் தெரிவிப்போம்.

[10:22] அவர்தான் உங்களை தரையிலும் மற்றும் கடலிலும் பயணிக்கச் செய்கின்றார். நீங்கள் கப்பலில் ஏறிக் கொள்கின்றீர்கள், மேலும் அவை மிதமான நல்ல காற்றில் இதமாக மிதந்து செல்கின்றன. பின்னர் அதிலே மகிழ்ந்திருக்கும் சமயம், உக்கிரமான காற்று வீசுகின்றது, மேலும் அலைகள் அவர்களை ஒவ்வொரு புறத்திலிருந்தும் சூழ்ந்து கொள்கின்றது. இந்த வேளையில் தான் அவர்கள், உண்மையோடு தங்கள் பிரார்த்தனைகளை அவருக்கு மட்டுமே அர்ப்பணித்தவர்களாக கடவுள்-இடம்: “இந்த முறை மட்டும் எங்களை நீர் காப்பாற்றுவீரானால், என்றென்றும் நாங்கள் நன்றியுடன் இருப்போம்” என்று இறைஞ்சிப் பிரார்த்தனை செய்கின்றார்கள்.

[10:24] இவ்வுலக வாழ்விற்குரிய உதாரணம் இது போன்றதேயாகும்: பூமியில் இருந்து எல்லா வகைத் தாவரங்களை முளைப்பிக்கவும், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உணவு வழங்கவும் விண்ணிலிருந்து நாம் தண்ணீரை இறக்கி அனுப்புகின்றோம், பின்னர் பூமி பூரணமாக அலங்கரிக்கப்பட்டு, மேலும் அதன் மக்கள் அதன் மீது முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கும் போது, நம்முடைய தீர்ப்பு இரவிலோ அல்லது பகலிலோ* வருகின்றது, முந்திய நாளில் எதுவுமே இல்லாமலிருந்ததைப் போல, அதனை முற்றிலும் தரிசாக்கி விட்டு விடுகின்றது. சிந்திக்கும் மக்களுக்கு இந்த வெளிப்பாடுகளை நாம் இவ்விதமாக விவரிக்கின்றோம்.