Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:24 — ஜோனா

இவ்வுலக வாழ்விற்குரிய உதாரணம் இது போன்றதேயாகும்: பூமியில் இருந்து எல்லா வகைத் தாவரங்களை முளைப்பிக்கவும், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உணவு வழங்கவும் விண்ணிலிருந்து நாம் தண்ணீரை இறக்கி அனுப்புகின்றோம், பின்னர் பூமி பூரணமாக அலங்கரிக்கப்பட்டு, மேலும் அதன் மக்கள் அதன் மீது முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கும் போது, நம்முடைய தீர்ப்பு இரவிலோ அல்லது பகலிலோ* வருகின்றது, முந்திய நாளில் எதுவுமே இல்லாமலிருந்ததைப் போல, அதனை முற்றிலும் தரிசாக்கி விட்டு விடுகின்றது. சிந்திக்கும் மக்களுக்கு இந்த வெளிப்பாடுகளை நாம் இவ்விதமாக விவரிக்கின்றோம்.

[10:23] ஆனால் அவர்களை அவர் காப்பாற்றியவுடன், அவர்கள் பூமியில் வரம்பு மீறுகின்றனர், மேலும் சத்தியத்தை எதிர்க்கின்றனர். மனிதர்களே, உங்களுடைய வரம்பு மீறல்கள் உங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கு மட்டுமே கேடாகும். நீங்கள் இவ்வுலக வாழ்வில் முற்றிலும் மூழ்கியவர் களாகவே இருக்கின்றீர்கள், பின்னர் நம்மிடமே உங்கள் இறுதித் திரும்புதல் உள்ளது, அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்த ஒவ்வொன்றையும் நாம் உங்களுக்குத் தெரிவிப்போம்.

[10:25] கடவுள் உங்களை அமைதியான இல்லத்தின் பால் அழைக்கின்றார், மேலும் தான் நாடு வோரை நேரானதொரு பாதையில் வழிநடத்து கின்றார்.