குர்ஆன் 10:25 — ஜோனா
கடவுள் உங்களை அமைதியான இல்லத்தின் பால் அழைக்கின்றார், மேலும் தான் நாடு வோரை நேரானதொரு பாதையில் வழிநடத்து கின்றார்.
[10:24] இவ்வுலக வாழ்விற்குரிய உதாரணம் இது போன்றதேயாகும்: பூமியில் இருந்து எல்லா வகைத் தாவரங்களை முளைப்பிக்கவும், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உணவு வழங்கவும் விண்ணிலிருந்து நாம் தண்ணீரை இறக்கி அனுப்புகின்றோம், பின்னர் பூமி பூரணமாக அலங்கரிக்கப்பட்டு, மேலும் அதன் மக்கள் அதன் மீது முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கும் போது, நம்முடைய தீர்ப்பு இரவிலோ அல்லது பகலிலோ* வருகின்றது, முந்திய நாளில் எதுவுமே இல்லாமலிருந்ததைப் போல, அதனை முற்றிலும் தரிசாக்கி விட்டு விடுகின்றது. சிந்திக்கும் மக்களுக்கு இந்த வெளிப்பாடுகளை நாம் இவ்விதமாக விவரிக்கின்றோம்.
[10:26] நன்னெறியாளர்களுக்குரிய வெகுமதி, பன்மடங்காகப் பெருக்கப்படும். அவர்களு டைய முகங்கள் எவ்வித நஷ்டத்தையோ அல்லது கேவலத்தையோ ஒரு போதும் அனுபவிக்காது. இவர்கள்தான் சுவனவாசிகள் ஆவார்கள்; அங்கே அவர்கள் என்றென்றும் வசிப்பார்கள்.