குர்ஆன் 10:45 — ஜோனா
அவர்கள் அனைவரையும் அவர் ஒன்று கூட்டும் அந்நாளில், இவ்வுலகில் அவர்கள் சந்தித்த காலத்தை, ஒரு நாளின் ஒரு மணி நேரமே அவர்கள் கழித்ததைப் போல் உணர்ந்துக் கொள்வார்கள். கடவுள்-ன் சந்திப்பில் நம்பிக்கை கொள்ள மறுத்தவர்களும், மேலும் வழிதவறுவதைத் தேர்ந்தெடுத்து கொண்டவர்களும், உண்மையில் நஷ்டவாளிகள் ஆவர்.
[10:44] கடவுள் ஒருபோதும் மனிதர்களுக்கு அநீதம் இழைப்பதில்லை; மனிதர்கள்தான் தங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கே அநீதியிழைத்துக் கொள்கின்றனர்.
[10:46] அவர்களுக்கு நாம் வாக்களிக்கும் (தண்டனை யில்) சிலவற்றை நாம் உமக்குக் காட்டினாலும், அல்லது அதற்கு முன்பே உமது வாழ்வை முடித்து விட்டாலும், அவர்களுடைய இறுதித் திரும்புதல் நம் வசமே உள்ளது. அவர்கள் செய்யும் ஒவ்வொன்றிற்கும் கடவுள் சாட்சியாக உள்ளார்.