குர்ஆன் 10:46 — ஜோனா
அவர்களுக்கு நாம் வாக்களிக்கும் (தண்டனை யில்) சிலவற்றை நாம் உமக்குக் காட்டினாலும், அல்லது அதற்கு முன்பே உமது வாழ்வை முடித்து விட்டாலும், அவர்களுடைய இறுதித் திரும்புதல் நம் வசமே உள்ளது. அவர்கள் செய்யும் ஒவ்வொன்றிற்கும் கடவுள் சாட்சியாக உள்ளார்.
[10:45] அவர்கள் அனைவரையும் அவர் ஒன்று கூட்டும் அந்நாளில், இவ்வுலகில் அவர்கள் சந்தித்த காலத்தை, ஒரு நாளின் ஒரு மணி நேரமே அவர்கள் கழித்ததைப் போல் உணர்ந்துக் கொள்வார்கள். கடவுள்-ன் சந்திப்பில் நம்பிக்கை கொள்ள மறுத்தவர்களும், மேலும் வழிதவறுவதைத் தேர்ந்தெடுத்து கொண்டவர்களும், உண்மையில் நஷ்டவாளிகள் ஆவர்.
[10:47] ஒவ்வொரு சமூகத்திற்கும், ஒரு தூதர். அவர்களுடைய தூதர் வந்துவிட்ட பின்னர், சிறிதளவும் அநீதமின்றி, அவர்கள் நியாயமாகத் தீர்ப்பளிக்கப் படுகின்றனர்.