குர்ஆன் 10:52 — ஜோனா
வரம்பு மீறியவர்களிடம், “முடிவேயில்லாத தண்டனையைச் சுவையுங்கள். நீங்கள் எதனைச் சம்பாதித்தீர்களோ அதற்கான பிரதிபலனை மிகச்சரியாக கொடுக்கப்படுகின்றீர்கள் அல்ல வா? ” என்று கூறப்படும்.
[10:51] “அது நிகழ்ந்து விட்டால், அப்போது நீங்கள் நம்பிக்கை கொள்வீர்களா? அப்போது ஏன் நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்? அது வரட்டும் என்று நீங்கள் சவால் விட்டுக் கொண்டி ருந்தீர்களே?”
[10:53] அவர்கள் உம்மிடம்: “ உண்மையில் இதுதான் நிகழப்போகின்றதா?” என்று முன்னறிவிப்பிற்கு சவால் விடுகின்றனர். “ஆம் உண்மையில், என் இரட்சகர் மீது ஆணையாக, இதுவே சத்தியமாகும், மேலும் நீங்கள் ஒருபோதும் தப்பித்து விட இயலாது” என்று கூறுவீராக.