Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:68 — ஜோனா

அவர்கள், “கடவுள் ஒரு மகனைப் பெற்றெடுத் திருக்கின்றார்!” என்று கூறினார்கள். அவர் துதிப்பிற்குரியவர். அவரே மிக்க செல்வந்தர். வானங்களில் உள்ள ஒவ்வொன்றும், இன்னும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் அவருக்கே உரியது. இத்தகைய தொரு இறைநிந்தனைக்கு ஆதரவளி க்கும் சான்றுகள் எதுவும் உங்களிடம் இல்லை. கடவுள்-ஐப் பற்றி நீங்கள் அறியாதவற்றை நீங்கள் கூறுகின்றீர்களா?

[10:67] அவர்தான் இரவை உங்கள் ஓய்விற்கென ஆக்கினார், மேலும் பகலை ஒளியூட்டப் பட்டதாக ஆக்கினார். கேட்கக்கூடியவர் களுக்கு இவற்றில் சான்றுகள் உள்ளன.

[10:69] “கடவுள்-ஐப் பற்றிப் பொய்களை இட்டுக்கட்டு பவர்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டார்கள்” என்று பிரகடனம் செய்வீராக.