குர்ஆன் 10:70 — ஜோனா
இவ்வுலகில் அவர்களுடைய தற்காலிகப் பங்கை அவர்கள் பெறுவார்கள், அதன் பின்னர் நம்மிடமே அவர்களுடைய இறுதித் திரும்புதல் இருக்கின்றது, அதன் பின்னர் அவர்கள் நம்பிக்கை கொள்ள மறுத்ததற்காக அவர்களை நாம் கடுமையான தண்டனையில் கொண்டு சேர்த்து விடுவோம்.
[10:69] “கடவுள்-ஐப் பற்றிப் பொய்களை இட்டுக்கட்டு பவர்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டார்கள்” என்று பிரகடனம் செய்வீராக.
[10:71] நோவாவின் சரித்திரத்தை அவர்களுக்கு ஓதிக் காட்டுவீராக. அவர் தன் சமூகத்தாரிடம் கூறினார், “என் சமூகத்தாரே, எனது நிலையும் கடவுள்-ன் வெளிப்பாடுகளைப் பற்றி நான் நினைவூட்டுவதும் உங்களுக்கு மிகவும் அதிகமானதாக தென்படுமானால், அப்போது நான் எனது பொறுப்பைக் கடவுள்-இடம் ஒப்படைத்து விடுகின்றேன். நீங்கள் உங்கள் தலைவர்களுடன் ஒன்று கூடிக் கலந்து உங்களுக்கிடையில் ஓர் இறுதித் தீர்மானத்திற்கு ஒத்து வாருங்கள், பின்னர் தாமதமின்றி அதனை எனக்குத் தெரியப்படுத் துங்கள்.