குர்ஆன் 10:91 — ஜோனா
“மிகவும் தாமதம்*! ஏனெனில், ஏற்கனவே நீ கலகம் செய்துவிட்டாய், மேலும் வரம்பு மீறிய ஒருவனாக இருப்பதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாய்.
[10:90] நாம் இஸ்ரவேலின் சந்ததியினரை கடலைக் கடக்கச் செய்து காப்பாற்றினோம். வலுச்சண்டை செய்பவர்களாகவும், மேலும் பாவகரமாகவும், ஃபேரோவும் அவனுடைய படையினரும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். மூழ்கிவிடுதல் அவனுக்கு ஒரு நிச்சயமானதாக ஆனபோது, அவன், “இஸ்ரவேலின் சந்ததியினர் நம்பிக்கை கொண்டிருக்கும் அந்த ஒருவரைத் தவிர, வேறு தெய்வம் இல்லை என நான் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் அடிபணிந்த ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.
[10:92] “இன்று, எதிர்காலத் தலைமுறையினருக்கு உன்னை ஒரு படிப்பினையாக ஆக்குவதற்காக, உனது சடலத்தை நாம் பத்திரப் படுத்துவோம்*. துரதிஷ்டவசமாக, மனிதர்களில் அதிகமானோர் நமது அத்தாட்சிகளைப் பற்றி முற்றிலும் கவனமின்றி இருக்கின்றனர்.