குர்ஆன் 10:92 — ஜோனா
“இன்று, எதிர்காலத் தலைமுறையினருக்கு உன்னை ஒரு படிப்பினையாக ஆக்குவதற்காக, உனது சடலத்தை நாம் பத்திரப் படுத்துவோம்*. துரதிஷ்டவசமாக, மனிதர்களில் அதிகமானோர் நமது அத்தாட்சிகளைப் பற்றி முற்றிலும் கவனமின்றி இருக்கின்றனர்.
[10:91] “மிகவும் தாமதம்*! ஏனெனில், ஏற்கனவே நீ கலகம் செய்துவிட்டாய், மேலும் வரம்பு மீறிய ஒருவனாக இருப்பதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாய்.
[10:93] இஸ்ரவேலின் சந்ததியினருக்கு கண்ணிய மானதொரு அந்தஸ்தைக் கொண்டு நாம் கொடையளித்தோம், மேலும் நல்ல வாழ்வாதாரங் களைக் கொண்டு அவர்களுக்கு அருள்பாலித் தோம். இருப்பினும், இந்த அறிவு அவர்களிடம் வந்த போது, அவர்கள் தர்க்கம் செய்து கொண்டனர். அவர்கள் தர்க்கித்துக் கொண்ட ஒவ்வொன்றைக் குறித்தும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று உமது இரட்சகர் அவர்களுக்குத் தீர்ப்பு அளிப்பார்.