குர்ஆன் 10:98 — ஜோனா
فَلَولا كانَت قَريَةٌ ءامَنَت فَنَفَعَها إيمٰنُها إِلّا قَومَ يونُسَ لَمّا ءامَنوا كَشَفنا عَنهُم عَذابَ الخِزىِ فِى الحَيوٰةِ الدُّنيا وَمَتَّعنٰهُم إِلىٰ حينٍ
நம்பிக்கை கொள்ளும் எந்தச் சமூகத்திற்கும் நம்பிக்கை கொண்டதற்கான வெகுமதி நிச்சய மாகக் கொடுக்கப்படும். உதாரணமாக, ஜோனா வின் சமூகத்தார்: அவர்கள் நம்பிக்கை கொண்ட போது, இவ்வுலகில் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்த இழிவான தண்டனையை நாம் அகற்றினோம், மேலும் அவர்களை நாம் வளமானவர்களாக ஆக்கினோம்.
[10:97] வலிமிகுந்த அந்தத் தண்டனையை அவர்கள் காணும் வரை, எவ்விதமான சான்றை நீர் அவர்களிடம் காட்டினாலும் ஒரு பொருட்டல்ல, (அவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது).
[10:99] உமது இரட்சகர் நாடியிருந்தால், பூமியில் உள்ள எல்லா மக்களும் நம்பிக்கை கொண்டுவிட்டிருப் பார்கள்.*நம்பிக்கையாளர்களாகும்படி மக்களை நிர்ப்பந்திக்க நீர் விரும்புகின்றீரா?