Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:99 — ஜோனா

உமது இரட்சகர் நாடியிருந்தால், பூமியில் உள்ள எல்லா மக்களும் நம்பிக்கை கொண்டுவிட்டிருப் பார்கள்.*நம்பிக்கையாளர்களாகும்படி மக்களை நிர்ப்பந்திக்க நீர் விரும்புகின்றீரா?

[10:98] நம்பிக்கை கொள்ளும் எந்தச் சமூகத்திற்கும் நம்பிக்கை கொண்டதற்கான வெகுமதி நிச்சய மாகக் கொடுக்கப்படும். உதாரணமாக, ஜோனா வின் சமூகத்தார்: அவர்கள் நம்பிக்கை கொண்ட போது, இவ்வுலகில் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்த இழிவான தண்டனையை நாம் அகற்றினோம், மேலும் அவர்களை நாம் வளமானவர்களாக ஆக்கினோம்.

[10:100] கடவுள்-ன் நாட்டத்திற்கு ஏற்பவே தவிர எந்த ஆன்மாவும் நம்பிக்கை கொள்ள இயலாது. ஏனெனில், புரிந்து கொள்ள மறுப்பவர்கள் மீது அவர் ஒரு சாபத்தை வைத்து விடுகின்றார்.