குர்ஆன் 11:113 — ஹூ
நீங்கள் நரகத்திற்குள்ளாகி, மேலும் கடவுள்-க் கெதிராக உங்களுக்கு உதவி செய்யத் தோழர் கள் எவரையும் காணாமலும், அதன் பின்னர் நஷ்டமடைந்தவர்களாகவும் முடிந்து விடா திருக்கும் பொருட்டு, வரம்பு மீறியவர்களின் பால் சாய்ந்து விடாதீர்கள்.
[11:112] ஆகையால், நீர் பின்பற்ற கட்டளையிடப்பட்ட பாதையில், உம்மோடு வருந்தித்திருந்தியவர் களுடன் தொடர்ந்து செல்வீராக, மேலும் வரம்பு மீறாதிருப்பீராக. நீங்கள் செய்கின்ற ஒவ்வொன் றையும் அவர் பார்ப்பவராக இருக்கின்றார்.
[11:114] பகலின் இரு முனைகளிலும், இரவின் போதும் நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்க வேண்டும். நன்னெறியான செயல்கள் தீய செயல்களைத் துடைத்தெடுத்து விடுகின்றன. கவனத்தில் எடுத்துக் கொள்ளக் கூடியவர்களுக்கு இது ஒரு நினைவூட்டல் ஆகும்.