குர்ஆன் 11:115 — ஹூ
நீங்கள் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும், ஏனெனில் கடவுள் நன்னெறியாளர் களுக்குப் பிரதிபலனளிக்க ஒரு போதும் தவறுவதில்லை.
[11:114] பகலின் இரு முனைகளிலும், இரவின் போதும் நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்க வேண்டும். நன்னெறியான செயல்கள் தீய செயல்களைத் துடைத்தெடுத்து விடுகின்றன. கவனத்தில் எடுத்துக் கொள்ளக் கூடியவர்களுக்கு இது ஒரு நினைவூட்டல் ஆகும்.
[11:116] தீமைகளைத் தடுப்பதற்குப் போதுமான புத்திசாலித்தனத்தை மட்டும் முந்திய தலை முறையினரில் இருந்த சிலர் பெற்றிருந்ததால்! அவர்களில் சிலர் மட்டுமே நம்மால் காக்கப் படுவதற்குத் தகுதி பெற்றிருந்தார்கள். வரம்பு மீறியவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் பொருள் சார்ந்த ஆடம்பரங்களில் மூழ்கி இருந்தனர்; அவர்கள் குற்றவாளிகளாக இருந் தனர்.