குர்ஆன் 11:118 — ஹூ
உமது இரட்சகர் நாடியிருந்தால், எல்லா மக்களும் (நம்பிக்கையாளர்களாகிய) ஒரே கூட்டமாக இருந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் எப் போதும் (சத்தியத்தை) தர்க்கித்துக் கொண்டிருப் பார்கள்.
[11:117] எந்த சமூகத்தையும் அதன் மக்கள் நன்னெறி யாளர்களாக இருக்கும் பொழுது, உமது இரட்சகர் ஒரு போதும் அநீதமாக அழித்து விடுவதில்லை.
[11:119] உமது இரட்சகரிடமிருந்து கருணையைக் கொண்டு அருள்பாலிக்கப்பட்டவர்கள் மட்டுமே (சத்தியத்தை தர்க்கம் செய்ய மாட்டார்கள்). இதனால் தான் அவர் அவர்களைப் படைத்தார்.* “நான் ஜின்கள் மற்றும் மனிதர்கள் அனைவரை யும் ஒன்று சேர்த்து நரகத்தை நிரப்புவேன்” ** என்ற உமது இரட்சகரின் தீர்ப்பு ஏற்கனவே வழங்கப் பட்டுவிட்டது.