Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:120 — ஹூ

நாம் உமது இதயத்தைப் பலப்படுத்துவதற்காக தூதர்களின் சரித்திரத்தில் போதுமானதை உமக்கு விவரிக்கின்றோம். இதில் உமக்கு சத்தியமும், அதே போல் நம்பிக்கையாளர் களுக்கு ஞான உபதேசங்களும், மற்றும் நினைவூட்டல்களும் வந்துள்ளன.

[11:119] உமது இரட்சகரிடமிருந்து கருணையைக் கொண்டு அருள்பாலிக்கப்பட்டவர்கள் மட்டுமே (சத்தியத்தை தர்க்கம் செய்ய மாட்டார்கள்). இதனால் தான் அவர் அவர்களைப் படைத்தார்.* “நான் ஜின்கள் மற்றும் மனிதர்கள் அனைவரை யும் ஒன்று சேர்த்து நரகத்தை நிரப்புவேன்” ** என்ற உமது இரட்சகரின் தீர்ப்பு ஏற்கனவே வழங்கப் பட்டுவிட்டது.

[11:121] நம்ப மறுப்பவர்களிடம் கூறுவீராக , “ உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், அவ்வாறே நாங்களும் செய்வோம்.