குர்ஆன் 11:23 — ஹூ
நம்பிக்கை கொண்டு, நன்னெறியானதொரு வாழ்வு நடத்தி, மேலும் தங்கள் இரட்சகருக்குத் தங்களையே அர்ப்பணிப்போரைப் பொறுத் தவரை, அவர்கள் சுவனவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அங்கே என்றென்றும் தங்கி இருப்பார்கள்.
[11:22] மறுவுலகில், மிக மோசமாக நஷ்டப்பட்டவர் களாக அவர்கள் இருப்பார்கள் என்பதில், சந்தேகம் இல்லை.
[11:24] இவ்விரு கூட்டத்தாருக்குரிய உதாரணமாவது, குருடர் மற்றும் செவிடரை பார்ப்பவர் மற்றும் கேட்பவரோடு ஒப்பிடுவதைப் போன்றதாகும். அவர்கள் சமமானவர்களா? நீங்கள் கவனத்தில் கொள்ள மாட்டீர்களா?