குர்ஆன் 11:36 — ஹூ
நோவாவிற்கு உள்ளுணர்வு அளிக்கப்பட்டது: “ஏற்கனவே நம்பிக்கை கொண்டோரைத் தவிர, உமது சமூகத்தாரில் எவரும் இதற்கு அப்பால் நம்பிக்கை கொள்ளப்போவதில்லை. அவர் களுடைய செயல்களால் துக்கமடையாதீர்.
[11:35] “இந்தக் கதையை இவர் உருவாக்கிக் கொண்டார்” என்று அவர்கள் கூறுவார் களாயின், அப்போது “இதனை நான் உருவாக் கியிருப்பேனாயின், என் குற்றத்திற்கு நானே பொறுப்பாளியாவேன், மேலும் நீங்கள் செய்யும் எந்தக் குற்றத்திற்கும், நான் குற்றமற்றவன் ஆவேன்” என்று கூறுவீராக.
[11:37] “நம்முடைய கவனமிக்க பார்வையின் கீழ், மேலும் நம்முடைய உள்ளுணர்வைக் கொண்டு, படகைக் கட்டுவீராக, மேலும் வரம்பு மீறியவர் களின் சார்பாக என்னிடம் இறைஞ்சிப் பிரார்த்திக்காதீர்; அவர்கள் மூழ்க வேண்டும் என்று விதிக்கபட்டு விட்டார்கள்.”