குர்ஆன் 11:37 — ஹூ
“நம்முடைய கவனமிக்க பார்வையின் கீழ், மேலும் நம்முடைய உள்ளுணர்வைக் கொண்டு, படகைக் கட்டுவீராக, மேலும் வரம்பு மீறியவர் களின் சார்பாக என்னிடம் இறைஞ்சிப் பிரார்த்திக்காதீர்; அவர்கள் மூழ்க வேண்டும் என்று விதிக்கபட்டு விட்டார்கள்.”
[11:36] நோவாவிற்கு உள்ளுணர்வு அளிக்கப்பட்டது: “ஏற்கனவே நம்பிக்கை கொண்டோரைத் தவிர, உமது சமூகத்தாரில் எவரும் இதற்கு அப்பால் நம்பிக்கை கொள்ளப்போவதில்லை. அவர் களுடைய செயல்களால் துக்கமடையாதீர்.
[11:38] அவர் படகைக் கட்டிக் கொண்டிருக்கும் போது, அவருடைய சமூகத்தாரில் சிலர் அவரைக் கடந்து சென்ற போதெல்லாம் அவரைப் பார்த்து நகைத்தனர். அவர் கூறினார், “எங்களைப் பார்த்து நீங்கள் நகைக்கலாம், ஆனால் நீங்கள் நகைப்பதைப் போலவே நாங்களும் உங்களைப் பார்த்து நகைக்கின்றோம்.