குர்ஆன் 11:39 — ஹூ
“இழிவு மிக்கதோர் தண்டனையை அனுபவிக் கவும், மேலும் நிலைத்திருக்குமொரு வேதனை க்கு உள்ளாகப் போவதும் யார் என்பதை நீங்கள் நிச்சயம் கண்டு கொள்வீர்கள்”.
[11:38] அவர் படகைக் கட்டிக் கொண்டிருக்கும் போது, அவருடைய சமூகத்தாரில் சிலர் அவரைக் கடந்து சென்ற போதெல்லாம் அவரைப் பார்த்து நகைத்தனர். அவர் கூறினார், “எங்களைப் பார்த்து நீங்கள் நகைக்கலாம், ஆனால் நீங்கள் நகைப்பதைப் போலவே நாங்களும் உங்களைப் பார்த்து நகைக்கின்றோம்.
[11:40] நம்முடைய தீர்ப்பு வந்து, மேலும் சூழ்நிலைக் கொதித்தெழுந்தபோது, நாம் “ மரண தண்டனை அளிக்கப்பட்டவர்களைத் தவிர, அதில் உம்முடைய குடும்பத்தாரோடு, ஒவ் வொரு வகையிலும்* ஒரு ஜோடியை ஏற்றிக் கொண்டு செல்வீராக. நம்பிக்கை கொண்டவர் களை உம்மோடு ஏற்றிக் கொள்வீராக” என்று கூறினோம், மேலும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்கள் மிகச் சிலர் மட்டுமே.